தொடர்புக்கு : 9487017993 ( அலுவலகம்)

                                .9360377479 ( ஆலோசனை)


அறிமுகம்:

எங்கள் நிறுவனம் மயிலாடுதுறை மாவட்டத்தில் திருக்கடையூர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் நிறுவனர் திரு.கஜேந்திரபிரபு அவர்கள் மூலம் 2018 முதல் இயங்கிவருகிறது.



Founder Name : Er.P.Gajendraprabhu, B.Tech,EEE.,S.E.C(TN).PL.,
Place                 : Mayiladuthurai
Registration and Certificate Regulated by Govt of India.



     நமது நிறுவனம் அரசு விதிமுறைகளுக்கு கீழ் பதிவு செய்யப்பட்டு அரசு விதிமுறைகளை பின்பற்றி இயங்கி வருகின்றது. இந்த நிறுவனம் வளர்வதற்கு மிகவும் உறுதுனையாக இருந்தவர்கள்  மதிப்பிற்க்குறிய நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் திரு. அருண் தம்புராஜ் அவர்கள் (இந்திய ஆட்சி பணி) மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் மதிப்பிற்க்குறிய திரு.வி.சுந்தரபாண்டியன் அவர்களும் ஆவார்கள். 



ஆரம்ப காலங்களில் உறுதுணையாக நின்ற இவர்கள் இருவருக்கும் இன்னும் பல உயர்ந்த இடத்திற்கு நாம் சென்றாலும் நமது நிறுவனம் என்றும் கடமைப் பட்டிருக்கும்.




நோக்கம்:
    எங்கள் நிறுவனத்தின் நோக்கங்களில் முக்கியமான ஒரு கடமை வேலைவாய்ப்பு இல்லாத மற்றும் சுயத்தொழில் துவங்கி முன்னேர நினைக்கும் இளைஞர்கள் மற்றும் மகளிர் களுக்கு இலவச காளான் வளர்ப்பு பயிற்சி கொடுத்து தொழில் செய்வதற்க்கு அணைத்து உதவிகளையும் செய்வது மேலும் சுயத்தொழில் அனைவரும் செய்வது எங்களின் முக்கிய நோக்கம் ஆகும். 


புதிய தொழில்நுட்ப கருவிகள்:
 நமது நிறுவனம் காளான் வளர்ப்பு புதிய கருவியை வடிவமைத்து உள்ளது, காளான் வளர்ப்பில் தமிழ் நாட்டின் முதல் கருவி நமது நிறுவனமே கண்டுபிடித்து உள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறோம். இந்த கருவியின் முக்கிய பணி 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிப்பது ஆகும்.


கருவியின் முக்கிய பயன்பாடுகள்:
  • இந்த கருவி 24 மணி நேரமும் மனிதனின் துணை இல்லாமல் தானாகவே இயங்கும் திறன் கொண்டது, இது மனிதனை போல சிந்திக்கும் திறன் கொண்டது.
  • இந்த கருவி காளான் வளர்வதற்க்கு தேவையான வெப்பனிலை மற்றும் ஈரப்பம் ஆகியவற்றை சரியாக பராமரித்து காளான் வளர்ச்சியை மேம்படுத்தும் திறன் கொண்டது.
  • மனிதனின் துணையில்லாமல் காளான் குடிலில் தண்ணீர் தெளித்து பராமரிக்கும் திறன் கொண்டது.
  • காளான் குடிலில் உள்ள வெப்ப நிலை மற்றும் ஈரப்பதத்தை கண்கானித்து நமது கைப்பேசிக்கு தகவலை அனுப்பும் தன்மை கொண்டது.
  • நமது கைப்பேசி மூலம் காளான் குடிலில் உள்ள கருவிகளை இயக்க முடியும் மற்றும் கட்டுப்படுத்த முடியும்.
  • நாம் நமது தேவைக்காக வெளியூர் செல்ல வேண்டிய சூழ் நிலை ஏற்படும் நிலையில் இந்த கருவியின் துணை கொண்டு நாம் இயக்கலாம்.
  • மனித ஆற்றல் அதிகமாக தேவைப்படுவது இல்லை. ஆட்கள் வேலை செலவு குறைவு.
  • இந்த கருவி துள்ளியமாக செயல்படுவதால் தண்ணீர் தெளிக்கும் போது மிக குறைவான தண்ணீரே போதுமானதாக இருக்கும்.



காளான் வளர்ப்பு பயிற்சி இலவசமாக பிரதி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடைப்பெருறும். இலவச காளான் வளர்ப்பு புத்தகம் வழங்கப்படும். அரசு திட்டங்கள் மற்றும் தொழில் கடன் ஆலோசனைகள் இலவசமாக பரிந்துரைக்கப்படும்.