_________________________________________________
தொடர்புக்கு
: 9487017993 ( அலுவலகம்) 9360377479 ( ஆலோசனை)
காளான் வளர்ப்பு பயிற்சி இலவசமாக பிரதி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடைப்பெருறும். இலவச காளான் வளர்ப்பு புத்தகம் வழங்கப்படும். அரசு திட்டங்கள் மற்றும் தொழில் கடன் ஆலோசனைகள் இலவசமாக பரிந்துரைக்கப்படும்.
காளான் நன்மைகள் |
காளான் மூலம் கிடைக்கும் மருத்துவ நன்மைகள்:
இன்றைய
தலைமுறையின் முக்கிய உணவுளில் ஒன்று காளான். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்
விரும்பி உண்ணும் இந்த காளான், மற்ற பொருட்களைக் காட்டிலும் அதிகளவு புரோட்டின், குறைந்த
கலோரிகள் உடையதாகும். எனவே இது சுவையான உணவாக மட்டுமில்லாமல் சத்தான உணவாகவும் இருக்கிறது.
இதய நோயைத் தடுக்கிறது
காளான்கள் குறைந்த தாவர புரதங்களால் நிரம்பியுள்ளன.
காளான்களில் குளுட்டமேட் ரிபோநியூக்ளியோடைடுகளும் உள்ளன, அவை உப்பின் சுவையைத் தருவது
மட்டுமல்லாமல் சமைக்கும்போது உப்பு சேர்ப்பது கிட்டத்தட்ட தேவையற்றதாகவும் ஆகிவிடும்.
இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இறுதியில்
இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
ஆண்மைக்குறைவு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
காளான்களில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், போதுமான காளான்களைச்
சாப்பிடுவது உங்கள் ஆண்மைக்குறைவு மற்றும் குழந்தை இன்மை நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தலாம்.
தொப்பை மற்றும் கொழுப்பை குறைக்கும்
காளான்களில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும்
பைட்டோ கெமிக்கல்கள் ஆகியவை அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டவை.
மேலும் காளான்களைச் சாப்பிடுவது எடை அதிகரிப்பு, உடல் பருமன் அபாயத்தையும் குறைக்க
உதவும்.
எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும்
காளான்கள் வைட்டமின் D, கால்சியம், பொட்டாசியம்
மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றை கொண்டுள்ளன. புதிய எலும்புகளை உருவாக்கவும் அவற்றை ஆரோக்கியமாக
வைத்திருக்கவும் அவை உதவும். உங்கள் உணவில் காளான்களைத் தவறாமல் உட்கொள்வது எலும்பு
தொடர்பான நோய்கள் எலும்புப்புரை, எலும்பு வலி, எலும்பு சிதைவு போன்றவற்றைத் தடுக்க
உதவும் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
அல்சர் நோய் மற்றும் குடற்புண்களை குணப்படுத்தும்
காளான்களைச்
சாப்பிடுவது டிமென்ஷியா, பார்கின்சன் நோய், அல்சைமர் நோய் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க
உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நினைவாற்றலை மேம்படுத்தும்
காளான்களில்
இரண்டு முக்கிய ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. எர்கோதியோனைன் மற்றும் குளுதாதயோன். இது மூளையையும்,
உடலையும் விரைவில் வயதாவதிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல் மூளை செல்கள் மீது பாதுகாப்பு
விளைவையும் ஏற்படுத்துகிறது. காளான்களைச் சாப்பிடுவதால் நினைவாற்றல், கவனம் செலுத்தும்
ஆற்றல் போன்ற திறன்களை மேம்படுத்த முடியும்.
செரிமானத்தை மேம்படுத்தும்
காளான்களை சாப்பிடுவது உங்கள் செரிமானத்தை
மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உங்கள் குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் செரிமான
சிக்கல்களைத் தீர்க்கவும் இது உதவும்.
_________________________________________________