----------------------------------------------------------
மயிலாடுதுறை
(இந்திய அரசு அங்கிகாரம் பெற்ற நிறுவனம்)
----------------------------------------------------------
மருதநிலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் திருக்கடையூர் – MARUTHANILAM FED FARMERS RODUCER COMPANY LIMITED
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் திருவிளையாட்டம்
பகுதியில் மருத நிலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் புதிய தொழில் முனைவோரை உருவாக்கும்
முயற்சியின் கீழ் திருவிளையாட்டம் பகுதியில் திரு.அன்புசெல்வன் அவர்களுக்கு புதியதாக
காளான் பண்னை அமைக்கப்பட்டது. அதன்படி காளான் சாகுப்படி மற்றும் காளான் படுக்கைகள்
அமைக்கும் பணி சிறப்பாக துவங்கியது.
திரு.பொன்.நடராஜன் (இயக்குனர்) MNFFPCL |
இந்த நிகழ்வில் மருத நிலம் உழவர் உற்பத்தியாளர்
நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மதிப்பிற்குறிய திரு.பொன்.நடராஜன் அவர்கள் கலந்து கொண்டு
காளான் பண்னையின் உரிமையார் திரு.அன்புசெல்வன் அவர்கள், மற்றும் களான் பண்னையில் உள்ள
சக ஊழியர்கள் முன்னிலையில் தொழில் முறை வழிமுறைகள் மற்றும் நிர்வாக பணி குறித்து அலோசனை
வழங்கினார்.
இந்த நிகழ்சியினை தொடர்ந்து காளான் வளர்ப்பு
குறித்த தொழினுட்ப பயிற்சி மற்றும் லாபகரமான காளான் வளர்ப்பு முறைக்கு செய்ய வேண்டிய
வழிமுறைகள் குறித்து சுபிக்ஷம் அசோசியேட்ஸ் நிர்வாக இயக்குனர் மதிப்பிற்குறிய திரு.கஜேந்திரபிரபு
அவர்கள் விரிவான ஆலோசனை வழங்கினார்.
அதனை தொடர்ந்து மருத நிலம் உழவர் உற்பத்தியாளர்
நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் மதிப்பிற்குறிய திரு.முகம்மது சஃபி அவர்கள் விற்ப்பனை மற்றும்
சந்தை படுத்துதல் குறித்து ஆலோசனை வழங்கினார்.
காளான் வளர்ப்பு பயிற்சி இலவசமாக பிரதி சனிக்கிழமை மற்றும்
ஞாயிற்று கிழமைகளில் நடைப்பெருறும். இலவச காளான் வளர்ப்பு புத்தகம் வழங்கப்படும்.
அரசு திட்டங்கள் மற்றும் தொழில் கடன் ஆலோசனைகள் இலவசமாக பரிந்துரைக்கப்படும்.தொடர்புக்கு9 3 6 0 3 7 7 4 7 9