நவீன காளான் வளர்ப்பு கருவி மூலம் அதிக லாபத்தினை பெற்ற 9 பயனாளிகளை சந்தித்து மேலும் காளான் வளர்ப்பில் நவீன ஐ.ஓ.டி கருவியை சிறப்பாக செயல்படுத்துவது குறித்தும் கருவியை இன்னும் பல புதிய யுக்திகளை சேர்ப்பது குறித்தும் களந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், சங்கமங்களம் ஊராட்சிக்கு உட்பட்ட பழையனூர் என்ற கிராமத்தில் கடந்த வருடம் நவீன காளான் வளர்ப்பு ஐ.ஓ.டி கருவி தமிழ்னாடு அரசு திட்டத்தின் கீழ் பொருத்தப்பட்டது, இந்த கருவி பொறுத்தப்பட்டு ஓராண்டு நிறைவுப் பெற்ற நிலையில் நவீன காளான் வளர்ப்பு கருவி மூலம் அதிக லாபத்தினை அதாவது 3 மடங்கு கொள்ளை லாபத்தினை  பெற்ற 9 பயனாளிகளை நேரில் சந்தித்து அவர்களிடம் கருத்து கணிப்பு மற்றும் கறுவியின் செயல் திறன் சார்ந்த தகவல்கள் பெறப்பட்டது.

 

பயனாளிகள் அனைவரும் நமது ஐ.ஓ.டி கருவியின் அவசியத்தை நன்றாக புரிந்து கொண்டு பயண்படுத்தி வருகின்றார்கள் என தெரிய வந்தது. மேலும் ஒரி சில புதிய யுக்திகளை புகுத்த வேண்டும் என பயனாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர், இந்த வேண்டுகோள் விரைவில் பரிசீலிக்க பட்டு மிக விரைவில் செயல் முறைக்கு வரும்.

 

இந்த கலந்தாய்வு கூட்டத்தில் அனைவரும் கூறிய பொதுவான தகவல் 4 மட்டுமே..

1)  தண்ணீர் மிக குறைவாக பயன்படுத்தபடுகிறது.

2)  முன்பை விட தற்ப்பொழுது 3 மடங்கு அதிக லாபத்தை தருகிறது.

3)  மனித வேலை குறைகிறது, ஆட்கள் கூலி/சம்பளம் இல்லை.

4)  மிக துள்ளியமான வெப்பனிலை பராமரிக்கப்படுவதால் லாபம் சதவீதம் அதிகரித்து உள்ளது.

 

 இதன் மூலம் பயனாளிகள் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் மேலும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டனர். இந்த வெற்றி நமது நிறுவனத்தின் மாபெரும் சாதனை வெற்றியாக கருதப்பட்டு பெருமைக் கொள்கிறது.

 

SIOTS நிறுவனத்தின் முதன்மை நிர்வாக இயக்குனர் திரு.பா.கஜேந்திரபிரபு அவர்கள் பயனாளிகளின் கோரிக்கையை ஏற்று விரைவில் புதிய தொழில்னுட்பம் அடங்கிய கருவிகள் வடிவமைக்கப்பட்டு வருகின்ற ஜனவரி 2024 முதல் வழக்கதிற்க்கு வரும் என தெரிவித்துள்ளார். இதுவரை அரசு திட்டத்தில் இயங்கி வருகிற கருவிகளுக்கு இலவச அப்கிரேட் வழங்கப்ப்டும் என தெரிவித்துளார்.