மயிலாடுதுறை
(இந்திய அரசு அங்கிகாரம் பெற்ற நிறுவனம்)
----------------------------------------------------------
தமிழ் நாட்டில் வளர்க்கப்படும் காலானின் வகைகள்
தமிழகத்தில் வாணிப ரீதியாக மூன்று வகை காளான்கள் அதாவது மொட்டு, சிப்பி மற்றும் பால் காளான் ஆகியவைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன, மொட்டுக் காளான் வளர்ப்பதற்கு மக்கிய உரம் தேவைப்படுவதோடு, உற்பத்திக் கூடத்தின் வெப்பநிலை 20 செ.இருத்தல் அவசியம்.
எனவே மொட்டுக் காளான் உற்பத்திக்காகும் செலவினம் மிகவும் அதிகமாக இருக்கும். சிப்பி
மற்றும் பால் காளான்களை எளிய முறையில் நெல் வைக்கோலை மூலப்பொருளாகக் கொண்டு உற்பத்தி
செய்யலாம். இக்காளான்களில் அதிக புரதச் சத்து மற்றும் குறைந்த அளவு கொழுப்பு சத்து
உள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உணவாக உட்கொள்ளலாம். மேலும் இரத்த
அழுத்தம் மற்றும் நீரழிவு நோய்களை காளான் உண்பதால் குணப்படுத்த முடியும் என அறியப்பட்டுள்ளது.
காளான் இரகங்கள் | இனம் | நிறம் |
சிப்பிக்காளான் | ||
எம்.2 | பிளிரோட்டஸ் சஜேர்காஜ% | சாம்பல் |
கோ.1 | சிட்ரினோபைளியேட்டஸ் | தூய வெண்மை |
ஏ.பி.கே.1 | பி.இயோஸ் | இளஞ்சிவப்பு |
எம்.டி.யு.1 | பி.ஜமோர் | வெண்மை |
பி.எப். | பிப்ளோரிடா | வெண்மை |
எம்.டி.யு.2 | பிப்ளேபல்லேட்டஸ் | வெண்மை |
ஊட்டி 1 | பி.ஆஸ்ட்ரியேட்டர்ஸ் | வெண்மை |
கோ.2. | ஹிப்ஸிசைகஸ் உல்மேரியஸ் | வெண்மை |
பால்காளான் | ||
ஏ.பி.கே.2. | கோலோசைபி இண்டிகா | பால் வெண்மை |
மொட்டுக் காளான் | ||
ஊட்டி 1 | அகாரிகஸ் பைஸ்போரஸ் | பழுப்பு கலந்த வெண்மை |
ஊட்டி 2 | அகாரிகஸ் பைஸ்போரஸ் | பழுப்பு கலந்த வெண்மை |