சாதனை பெண்மணி - புவனேஸ்வரி எடுத்துகட்டிசாத்தனூர்

மயிலாடுதுறை மாவட்டம், திருக்களாச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட எடுத்துக்கட்டிசாத்தனூர் என்ற கிராமத்தில் நவீன காளான் வளர்ப்பு ஐ.ஓ.டி கருவி தமிழ்நாடு அரசு  வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தின் கீழ் பொருத்தப்பட்டது, 




ஆரம்ப காலத்தில் சமுகவலைத்தளம் மூலம் காளான் வளர்ப்பு பற்றி அறிந்து இந்த தொழிலை துவங்கியவர் புவனேஸ்வரி அவர்கள். தினமும் 100 முதல் 300 வரை இதன் மூலம் வருமானம் பெற்றுவந்தார். பின்பு இந்த தொழிலின் நுனுக்கத்தை தெரிந்துகொண்டு தொழிலை விரிவுப்படுத்த முடிவு செய்தார். 



இந்த நிலையில் மகலிர் சுய உதவி குழுவின் உறுப்பினராக இருந்த இவருக்கு தமிழ்நாடு அரசு  வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தின் மூலம் தொழிலை விரிவுப்படுத்த வங்கி கடன் வழங்கப்பட்டது. முழு முயற்சியுடன் தொழிலை துவங்கிய இவருக்கு பராமரிப்பு மற்றும் கண்கானிப்பதில் சிரமம் ஏற்ப்பட்டது. இந்த தொழிலில் அதிக லாபத்தை எடுக்க அதிக காளான் பைகளை தயார் செய்ய வேண்டும், அதுமட்டும் அல்லாமல் காளானில் நல்ல மகசுல் பெறுவதற்க்கு அறையின் வெப்ப நிலை சரியாக பரமரிக்க வேண்டும். இந்த நிலையில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் அதிகாரிகள் மூலம் சுபிக்ஷம் ஐ.ஓ.டி கருவியை பொருத்தினார்.



இந்த கருவி பொறுத்தப்பட்ட நிலையில் நவீன காளான் வளர்ப்பு கருவி மூலம் அதிக லாபத்தினை அதாவது 3 மடங்கு கொள்ளை லாபத்தினை  பெற்று நல்ல வருமானத்தினை பெற்று வருகிறார். இந்த தொழிலதிபரின் தொழில் நன்றாக மென் மேலும் வளர சுபிக்ஷம் அச்சோசியேஷன் நிர்வாக இயக்குனர் திரு.பா. கஜேந்திரபிரபு வாழ்த்துக்களை தெரிவித்துளார்.