உலக முதலீட்டாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று 22.09.2023 வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் உலக முதலீட்டாளர்கள் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மதிப்பிற்குறிய .பி மகாபாரதி அய்யா அவர்கள் தலைமைவகித்து  நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மையத்தின் ஜெனரல் மேனஜர் மதிப்பிற்க்குறிய வி.மணிவண்ணன் அய்யா அவர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் சுபிக்ஷம் அசோசியஷன் மற்றும் ..டி சொல்யுஷன் நிர்வாக இயக்குனர் திரு.பா.கஜேந்திரபிரபு அவர்கள் ஏனைய மாவட்ட தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

உலக முதலீட்டாளர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மதிப்பிற்குறிய .பி மகாபாரதி அய்யா அவர்கள் தலைமை உரை வழங்கினார்கள். அதன் விபரம் பின் வருமாறு,

" மயிலாடுதுறை மாவட்டம் மாநிலத்தில் மிக குறுகிய காலத்தில் முன்னேறி வருவதற்கு அனைத்து அதிகாரிகளுக்கும் மாவட்டத்தில் வசிக்கும் ஒவ்வொரு மக்களுக்கும் பெறும் பங்கு உள்ளதாக தெரிவித்தார். மேலும் ஒற்றுமையுடன் விளங்கும் நமது மாவட்டத்தை அனைத்து துறைகளிலுல் முதன்மையான இடத்திற்க்கு கொண்டு வர அனைவரும் சேர்ந்து நேர்மையாக உழைக்க வேண்டும். சிறு குறு தொழில் செய்பவர்களை அடுத்த கட்டதிற்க்கு செல்ல நமது மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் கூறினார். இதனை அனைவரும் பின்பற்றி பயனடையுமாறு கேட்டுக்கொண்டார்கள்." 

 

இதனை தொடர்ந்து மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் மதிப்பிற்க்குறிய திரு.வி.மணிவண்ணன் அய்யா அவர்கள் மாவட்டத்தில் உள்ள விற்பனை பொருள்களை இனையதள வர்த்தகம் முறையில் வியபாரம் செய்யும் வகையில் பிளிப்கார்ட் மற்றும் வால்மார்ட் நிறுவனங்களின் சேவையை மக்களுக்கு அறிமுகம் படுத்தினார்கள். இதன் மூலம் மாவட்ட தொழில் முனைவோர்கள் பயனடைந்தார்கள்.